2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பலவீதிகள் குன்றும் குழியுமாய்; மக்கள் விசனம்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 18 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜிப்ரான்

காத்தான்குடி நகரசபைபிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பல வீதிகள் குறிப்பிட்ட சில நாட்களுக்குள்ளேயே பழுதடைந்து குன்றும் குழியுமாக மாறிவிட்டதாக நகரவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் விநியோகிக்கப்படும் குடிநீரை பெறுவதற்காக வீதியின் பல இடங்கள் தோண்டப்பட்டு அவைகள் முறையாக மீண்டும் மூடப்படாமையினால் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வருபவர்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டு வருகினறர்.

தோண்டப்பட்டு படுகுழிகளாக்கப்பட்டுள்ள இவ்வீதிகளை மீண்டும் முறையாக மூடி வீதிகளை செப்பனிடுமாறு பொதுமக்களால் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X