2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

சந்திவெளியில் பஸ்கள் மீது கல்வீச்சு; பயணிகள் காயம்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 18 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளியில் வைத்து இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான  பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் இருவர் காயமடைந்துள்ளனர்.

ரிதீதென்ன டிப்போவுக்குச் சொந்தமான பஸ் ஒன்றும் வாழைச்சேனை டிப்போவுக்குச் சொந்தமான மற்றொரு பஸ்ஸுமே இந்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன என்று ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேச செயலகங்கள் சிலவற்றுடன் கிராமங்கள் சிலவற்றை இணைப்பது சம்பந்தமாக தமிழ் முஸ்லிம் சமூக முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதற்காக சில தரப்பினர் ஹர்த்தால் கடையடைப்பை இன்று நடத்துமாறு கோரியிருந்தனர்.

இருந்த போதிலும் இயல்பு நிலையும் வழமையான போக்குவரத்து இன்று காணப்பட்டது. போக்குவரத்தைத் தடைசெய்யும் முகமாகவே போக்குவரத்தில் ஈடுபட்ட பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0

  • Thamilan Saturday, 19 January 2013 05:41 PM

    நிலமையை நன்கு அறிந்து செய்தி வெளியிட தமிழ்மிரரை கேட்டுக் கொள்கிறோம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X