2026 மே 02, சனிக்கிழமை

கொக்கட்டிச்சோலை படுகொலை மறக்கமுடியாத வடு: கமல்தாஸ்

Kogilavani   / 2013 ஜனவரி 29 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.லோஹித்


'கொக்கட்டிச்சோலை படுகொலை, படுவான்கரை மக்களின் உயிர் மற்றும் பொருளாதார செயற்பாடுகள் என்பவை பறிக்கப்பட்ட ஒரு தினமாகும். அந்த தினம் எமது வாழ்வில் மறக்கமுடியாத ஒரு வடுவாகும்' என ஸ்தா சொலிடாரிட்டி நிறுவனத்தின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் அமைப்பின் உபதலைவருமான வ.கமல்தாஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் உளளூர் அரச சார்பற்ற நிறுவனமான ஸ்தா சொலிடாரிட்டி நிறுவனமும் கொக்கட்டிச்சோலையில் சக்தி மகளிர் இல்லத்துடன் இணைந்து ஆரம்பிக்கும் மகளிரை கௌரவமான வாழ்வுடன் மீளிணைக்கும் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஸ்தா சொலிடாரிட்டி நிறுவன கல்லடி அலுவலகத்தில் திங்கட்கிழமை பகல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தலைமையேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

'இந்த ஒன்று கூடலானது எமது அமைப்பு பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் தெளிவுபடுத்துவதற்காகவும் ஆரம்பிக்கப் போகும் செயற்பாடு பற்றி விபரிப்பத்றகாகவுமே கூட்டப்பட்டுள்ளது.

எமது ஸ்தா சொலிடாரிட்டி அமைப்பானது 2009 ஆம் அண்டு ஆரம்பிக்கப்பட்டது. யுத்தத்தினால் பாதிக்கப்ட்ட வறிய தமிழ் மக்களுக்கு உதவிகள் புரிவதே இதன் நோக்கமாகத் திகழ்ந்தது.

அந்த வகையில் இன்றைய தினம் தமிழ் மக்களுக்கு ஒரு சோக தினமாகும். அதாவது கொக்கட்டிச்சோலை படுகொலை மூலம், படுவான்கரை மக்களின் உயிர் மற்றும் பொருளாதார செயற்பாடுகள் என்பவை பறிக்கப்பட்ட ஒரு தினம். இது எமது வாழ்வில் மறக்கமுடியாத ஒரு வடுவாகும்.

ஏனெனில் நானும் அக்கோரச்சம்பவத்தில் அகப்பட்டு உயிர் பிழைத்து வந்தவன் அந்த விதத்தில் தான் அன்றைய தினத்தினை ஞாபகப்படுத்தினேன்.

அத்தோடு இன்றைய நிலையை கூறப்போனால் பல அரசியல்வாதிகள் வடுக்களை மட்டும் மக்கள் மனதில் விதைத்து அதற்கான தீர்வுகளினை மேற்கொள்ளாமல் அதில் அரசியல் நடாத்தி வருகின்றனர். மக்கள் உண்மை என்ன என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.
 
கொக்கட்டிச்சோலை படுகொலை இடம்பெற்றது அரசியல்வாதிகளின் செயற்பாடே தவிர இதில் இராணுவத்தினர் மட்டும் தனித்தோ சிங்கள மக்களினாலோ மேற்கொள்ளப்பட்டவை அல்ல. 'எய்தவன் இருக்க அம்பை நோகக் கூடாது' எனும் பழமொழிக்கமைய மக்களாகிய நாம் உணர்ந்து செயற்பட வேண்டும்.

இதை நான் ஏன் கூறுகின்றேன் என்றால் எமது மக்கள் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு உதவுவதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். 'தனிமரம் என்றும் தோப்பாகாது' எமது கரங்கள் மட்டும் சேர்ந்து ஒன்றும் நடக்கபோவதில்லை. நானும் இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்டவன் என்பதால் தான் இதனைக் கூறுகின்றேனே தவிர வேறு எதற்கும் இல்லை.

இவ்வாறு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு குடும்பத் தலைமைத்துவம் பெறப்பட்ட பெண்கள் 59000 பேர் இருப்பதாக கற்றுக் கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தெரிவிக்கின்றது.

அந்தவகையில் படுவான்கரைப் பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சக்தி பெண்கள் இல்லம் எனும் இல்லத்தினை கொக்கட்டிச் சோலையில் ஆரம்பிப்பதற்கு எமது அமைப்பு தீர்மானித்துள்ளது. ஆந்த வகையில் அதற்கான நிதி திரட்டும் பணிகளில் நாம் ஈடுபட்டுள்ளோம்.
இதற்காக பல அரசியல் வாதிகள் அரச நிறுவனங்கள் என்பவற்றுடன் தொடர்புகளை மேற்கொண்டுள்ளோம்.

ஆனால் அதற்கான செயற்பாடுகள் மந்த கதியடைந்துள்ளது. அனைவரும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கும் கௌரவத்தினை எம்மைப் போன்ற உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கைகொடுப்பதில்லை.

எமக்கு வெளிநாடுகளில் இருந்து உதவிகள் கிடைக்கின்ற போதிலும் சில அரசியல்வாதிகளினாலும் அரச உத்தியோகஸ்தர்களாலும் தடுத்து நிறுத்தப்படுகின்றது. அதனால் தான் எமது அமைப்பினை நாம் கம்பனி அமைப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்த பண கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் முற்றுமுழுதாக வங்கியினூடாக செயற்படுத்தபடுத்தப் படுகின்றது. எனவே எமது அமைப்பினையும் அதன் செயற்பாடுகளை மக்கள் புரிந்து கொண்டு எமக்கு ஆதரவு வழங்க வேண்டும்.

அத்தோடு எமது அரச சார்பற்ற நிறுவனங்களி;ன் இணையம் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உப தலைவர் நான் எமது இந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளுக்குள் அரசியல் தலையீடுகளை புகுத்தி அதன் முலம் அரசியல் நடத்துவதற்கு முனைவதாக இணையத்தின் தலைவரின்  செயற்பாடுகள் இருக்கின்றன.

அரசியல் என்பது அவரது தனிப்பட்ட விடயம் அதில் எமது அரச சார்பற்ற நிறுவனங்களை உட்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவரின் இச் செயற்பாடுளுக்கும் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் எதுவித தொடர்புகளும் இல்லை என்பதனையும் நான் இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மட்டக்களப்பில் உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் போக்கு மந்த கதியில் இருக்கின்றது அதன் செயற்பாடுகளுக்கு நிதிகள் கிடைக்கப்படினும் அவை சில அரச சேவையாளர்கள் மற்றும் சில அரசியல் செயற்பாடுகளினால் தடைப்படுத்தப்படுகின்றது'  என்று அவர் தெரிவித்தார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .