2026 மே 01, வெள்ளிக்கிழமை

ரயில் பஸ் புகையிரத சேவையின் பயண நேரம் மாற்றம்

Kogilavani   / 2013 பெப்ரவரி 08 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.லோஹித்

மட்டக்களப்பிலிருந்து கல்லோயா வரையும் இடம்பெறும் ரயில் பஸ் புகையிரத சேவையின் பயண நேரம் புதன்கிழமை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலைய அதிகாரி ஏ.சி. பௌசுல் அமீன் தெரிவித்தார்.

இப்புகையிரத பஸ் வண்டி மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து காலை 5.10 மணிக்கு புறப்பட்டு வாழைச்சேனை புகையிரத நிலையத்தினை காலை 6.05 க்கு வந்தடையவுள்ளது. வாழைச்சேனை புகையிரத நிலையத்திலிருந்து 6.10 க்கு புறப்படும் இப்புகையிரத பஸ் வண்டி 6.43 மணிக்கு றதிதென்ன உப புகையிரத நிலையத்தில் தரித்து 06.59 க்கு வெலிகந்த புகையிரத நிலையத்திற்கு சென்றடையவுள்ளது.

வெலிகந்த புகையிரத நிலையத்திலிருந்து புறப்படும் இப்புகையிரத பஸ் வண்டி காலை 7.43க்கு பொலன்னருவைக்கு சென்றடையும். ஹிங்குராகொட புகையிரத நிலையத்தில் காலை 8.16க்கு செல்லும் இப்புகையிரத பஸ் வண்டி கல்லோயா புகையிரத நிலையத்திற்கு காலை 8.45 மணிக்கு சென்று தனது பயணத்தை முடிவுறுத்திக் கொள்ளும் என அவர் தெரிவித்தார்.

அதேவேளை கல்லோயாவிலிருந்து பிற்பகல் 1.00 மணிக்கு பிரயாணத்தை ஆரம்பிக்கும் இப்புகையிரத பஸ் வண்டி பிற்பகல் 3.33க்கு வாழைச்சேனை புகையிரத நிலையத்தை வந்தடைந்து, பிற்பகல் 4.00 மணிக்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை சென்றடையவுள்ளது.

பயணிகளின் நன்மையை கருத்திற்கொண்டு பயண நேரம் மாற்றப்பட்டுள்ளது என தெரிவித்த அவர் புகையிரத நிலையங்கள், உப புகையிரத நிலையங்கள், புகையிரத தரிப்பிடங்களில் இப்புகையிரத பஸ் வண்டி தரித்துச் செல்லும் என மேலும் தெரிவித்தார்.

ஓட்டமாவடி புகையிரத தரிப்பிடத்திலும் இப்புகையிரத பஸ் வண்டி தரித்துச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .