2026 மே 01, வெள்ளிக்கிழமை

காத்தான்குடியில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 08 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.லோஹித்

மட்டக்களப்பு, காத்தான்குடிப்  பகுதியில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து  காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் எஸ்.சதுர்முகம் தெரிவித்தார்.   

மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பிரிவிற்குள்ளும் காத்தான்குடி சுகாதார சேவைகள் பிரிவிற்குள்ளேயும் அதிகளவிலான டெங்குத் தாக்கம் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.   

கடந்த ஜனவரி மாதம் முதல் இன்றுவரை மட்டக்களப்பில் 32 பேர் டெங்கு நோய்த் தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

டெங்கு நோய்த் தாக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில் நுளம்புப் பெருக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.   

டெங்கு நோயின் காத்தான்குடியைச் சேர்ந்த பத்துமாதக் குழந்தையொன்று பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அறிக்கை கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .