2026 மே 01, வெள்ளிக்கிழமை

போரதீவுப்பற்று பிரதேசசபை புதிய அலுவலகக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2013 பெப்ரவரி 09 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.லோஹித்


போரதீவுப்பற்று (வெல்லாவெளி) பிரதேச சபை புதிய அலுவலக கட்டித்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு  நேற்று வெள்ளிக்கிழமை வெல்லாவெளியில் நடைபெற்றது.

பிரதேச சபை தவிசாளர் வி.சிறிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி.ந.சத்தியானந்தி, வெல்லாவெளி பிரதேச செயலாளர்
ந.வில்வரெத்தினம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன்,

'பலகோடி ரூபா செலவில் அமையப்பெற இருக்கின்ற இந்த பிரதேச சபை கட்டிடமானது எமது மக்களின் எதிர்காலத் தேவைகளை  இலகுவாக செய்துமுடிக்கக் கூடிவாறு  அமையவேண்டும் என்பதே எனது விருப்பம். நாங்கள் அனைவரும் கட்சி பேதமின்றி எங்களது அபிவிருத்திப் பணிகளை செய்ய முன்வரவேண்டும்' என்றார்.

இந்நிகழ்வினை தொடர்ந்து மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் பாலயடி வட்டை கிராம பொது நூலக திறப்பு விழாவிலும் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .