2026 மே 01, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் விதவைகள், இளைஞர்க்கு தொழிலுதவி வழங்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 09 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சிஹாரா லத்தீப்


மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த சூழலால் வறுமைக்குள்ளாக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த  சிறுவர்கள், இளைஞர், யுவதிகள் மற்றும் விதவைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அபிவிருத்தி அமைச்சு விசேட திட்டங்களை அமுல்படுத்தவுள்ளது.

உற்பத்தி திறன் அபிவிருத்தி ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் விடுத்த பணிப்புரைக்கமைய இந்த விஷேட திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சின் ஊடகப் பிரிவுத் தகவல் தெரிவிக்கின்றது.

இதன்படி இம்மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த விதவைகள், இளைஞர், யுவதிகளுக்கு தொழில் முயற்சிக்கான உதவித் திட்டங்களும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த சிறார்கள், இளைஞர் யுவதிகளுக்கு தகவல் தொழில்நுட்ப கல்வி வசதிகளையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

இந்த விசேட திட்டங்களின் அமுலாக்கம் பற்றி திட்டமிடும் பொருட்டு அமைச்சர் பஷீர் சேகுதாவூத், ஏறாவூர் பிரதேச வறிய கிராமங்களுக்கு விஜயம் செய்து தேவைகளை கேட்டறிந்து கொண்டார் இதன்போது ஏறாவூர் கல்வி அபிவிருத்தி நிறுவனத்திற்கும் விஜயம் செய்து சிறார்கள் விதவைகளின் தேவைகளை கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது இந்நிறுவனத்தின் செயலாளர் ஏ.ஆர்.பெரோஸ் தலைமையிலான பணிப்பாளர் சபை ஏறாவூரில் அமுல்படுத்த வேண்டிய வறுமையான குடும்பங்களின் தேவைகளை அமைச்சர் பஷீர் சேகுதாவூத்திடம் முன்வைத்தது. இதனை கருத்திற்கொண்டு தமது அமைச்சினூடாக உதவித் திட்டங்கள் அமுல்படுத்தப்படும் என்று அமைச்சர் அங்கு தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .