2026 மே 01, வெள்ளிக்கிழமை

கல்வியில் புலமை காட்டிய மாணவர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 11 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


கல்வியில் புலமை காட்டிய மாணவர்களை கௌரவித்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை மட்டக்களப்பு, மைலம்பாவெளி விபுலாநந்தபுரத்தில் இடம்பெற்றது.

'மட்டக்களப்பு உதவும் கரங்கள் தொண்டர் நிறுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார்.

இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வியில் அதிகூடிய திறமைகளை வெளிப்படுத்திய சுமார் 120 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கௌரவிக்கபட்டனர்.

வலய மட்டத்தில் முதன்மை இடத்தைத் தக்க வைத்துக் கொண்ட ஆறு மாணவர்களுக்கு தலா ஐயாயிரம் ரூபா பண பரிசில்; வழங்கிவைக்கப்பட்டது. இதேவேளை பாடசலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ. ஞானம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிறார் நல வைத்திய நிபுணர் ஏஞ்சலா அருட்பிரகாசம், ஏறாவூர்ப் பற்று உதவிக் கல்விப் பணிப்பாளர் எம் பாலசுப்பிரமணியம், கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர் ஏ.அன்றூ உள்ளிட்ட இன்னும் பல அதிகாரிகளும் பாடசாலை அதிபர்கள், ஆசியரியர்களும் கலந்துகொண்டனர்.




  Comments - 0

  • Nafeel Monday, 11 February 2013 03:33 AM

    தூங்கிட மாட்டாங்களா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .