2026 மே 01, வெள்ளிக்கிழமை

மாரடைப்பால் பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்

Super User   / 2013 பெப்ரவரி 11 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாரடைப்பால் கடந்த சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். கல்லடியிலுள்ள  பொலிஸ் பயிற்சி பாடசாலையில் உதவி  பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய 49 வயதான அசோகா பிரியந்த என்பவரே இவ்வாறு மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு கடந்த வெள்ளிக்கிழமை  அதிகாலை மூன்று மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.கண்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற பொலிஸ் அதிகாரி இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பிலிருந்து குருநாகலிற்கு இடமாற்றலாகி செல்லவிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .