2026 மே 02, சனிக்கிழமை

கிழக்கு மாகாண பிரதி தபால்மா அதிபர் நியமனம்

Kogilavani   / 2013 பெப்ரவரி 13 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.லோஹித்

இலங்கை நிர்வாக சேவை முதலாம் விசேட தர அதிகாரியான கதிர்காமத்தம்பி விமலநாதன் கிழக்கு மாகாண பிரதி தபால்மா அதிபராக இன்று முதல் கடமையேற்றுக் கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடந்த 3 வருடங்களாக கடமையாற்றிவந்த கதிர்காமத்தம்பி விமலநாதன் நிர்வாக சேவையில் 22 வருட அனுபவம் கொண்டவர்.

அதேநேரம், வவுணதீவு, ஏறாவூர் நகர் உள்ளிட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேச செயலாளர் பிரிவுகளில் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .