2026 மே 01, வெள்ளிக்கிழமை

'நேர்மையின் புகலிடம்' சட்ட ஆலோசனை முகாம்

Kogilavani   / 2013 பெப்ரவரி 13 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.லோஹித்

அரச காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக 'நேர்மையின் புகலிடம்' எனும் சட்ட ஆலோசனை முகாமொன்றினை டிரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் சிறிலங்கா எதிர்வரும் 17ஆம் திகதி மட்டக்களப்பில் நடத்தவுள்ளது.

இந்த முகாம் மகாஜன கல்லூரி மண்டபத்தில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறும்.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் சிறிலங்கா மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை உள்ளடக்கி ஊழலை தடுப்பதற்கான சட்ட ஆலோசனைகளை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, அரச காணிகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமுகமாகவும் இலஞ்சம், ஊழல் அற்ற தேசமொன்றை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுமே இந்த சட்ட ஆலோசனை முகாம் நடத்தவுள்ளதாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் சிறிலங்காவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சி.கௌசிகன் தெரிவித்தார்.

அரச காணிகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமுகமான நடைபெறவுள்ள இந்த முகாமில் துறைசார் நிபுணர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமைகள் ஆணைக்குழு, சட்ட உதவி ஆணைக்குழு ஆகியவற்றின் உயரதிகாரிகள் ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்.

எனவே, அரச காணிகள் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் இவ் முகாமில் கலந்துகொண்டு தமது பிரச்சினைகள் தொடர்பில் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .