2026 மே 07, வியாழக்கிழமை

இறுதி சடங்கிற்கு முன் மரணக்கொடுப்பனவு வழங்கப்படவேண்டும்: சமுர்த்தி ஆணையாளர்

Kogilavani   / 2013 ஏப்ரல் 04 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன்

'சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுவரும் மரணக்கொடுப்பனவானது மரண இறுதிச் சடங்கு நடைபெறுவதற்கு முன்னர் வழங்கப்படல் வேண்டும்' என சமுர்த்தி ஆணையாளர் நாயகம் திருமதி சந்திரா விக்ரமசிங்க சகல மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர்களுக்கும் அறிவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் பி.குணரட்னம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சமுர்த்தி ஆணையாளர் நாயக திணைக்களத்தினால் விசேட சுற்று நிரூபமொன்று சகல மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அச் சுற்று நிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'சமுர்த்தி பயணாளி குடும்பத்தில் ஒருவர் மரணமடைந்தால் அவரின் இறுதிச் சடங்கு நடைபெறுவதற்கு முன்னர் சமுர்த்தி சமூக காப்புருதி கொடுப்பனவான பத்தாயிரம் ரூபா அக்குடும்பத்திற்கு வழங்கப்படல் வேண்டும்.

மரணம் நடைபெற்றுள்ளது என்பதை அப் பகுதி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமையாளர் உறுதிப்படுத்தினால் பிரதேச செயலாளரின் சிபாரிசுடன் இந்த கொடுப்பனவு உடன் வழங்கப்படல் வேண்டும்.

இந்த நடைமுறை மார்ச் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது..

முன்னர், இந்த மரணக் கொடுப்பனவானது மரணச் சான்றிதழ் வழங்கப்பட்டு மரணம் இடம்பெற்று ஒருமாத காலத்துக்குள் வழங்கப்பட்டது.
தற்போது இந்த கொடுப்பனவுக்கு மரணச்சான்றிதழ் அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று சமுர்த்தி பயனாளி குடும்பத்தில் இடம்பெறும்; திருமணத்திற்கு வழங்கப்படும் கொடுப்பனவும் 5000 ரூபாவாக மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே திருமணத்திற்கான கொடுப்பனவு 3000 ரூபாவாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது இக் கொடுப்பனவு 5000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று சமுர்த்தி பயனாளி குடும்பமொன்றில் இடம்பெறும் முதலாவது மற்றும் இரண்டாவது குழந்தைகள் பிறப்புக்கு மாத்திரமே முன்பு 3000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது.

தற்போது மூன்றாவது குழந்தை பிறப்புக்கும் இக்கொடுப்பனவு வழங்க முடியுமெனவும் சமுர்த்தி ஆணையாளர் நாயகத் திணைக்களம் அறிவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் பி.குணரட்னம் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .