2026 மே 07, வியாழக்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

Kogilavani   / 2013 ஏப்ரல் 04 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன், ஜவ்பர்கான் 

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனையில் காணிப் பிரச்சினை காரணமாக ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி மட். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் மற்றுமொருவர் விஷமருந்தி உள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று  மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தாளங்குடாவைச் சேர்ந்த சோமசுந்தரம் கனகரெட்ணம் என்பவரே துப்பாக்கி சூட்டுக்கு
இழக்காகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட நபர் விஷமருந்திய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .