2026 மே 09, சனிக்கிழமை

dd

வலயக் கல்வி பணிப்பாளருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Kogilavani   / 2013 ஏப்ரல் 04 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.எல்.ஜவ்பர்கான்

விசாரணைகள் எதுவுமின்றி இடமாற்றம் செய்யப்பட்டதாக ஆசிரியர் ஒருவரினால் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி பணிப்பாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விசாரணைகள் எதுவுமின்றி இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறி மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி பணிப்பாளருக்கு எதிராக ஏறாவூர் சாஹிர் மௌலானா வித்தியாலயத்தில் கடமைபுரிந்த ஆசிரியரான எஸ்.எம்.எம்.நஸீர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு, நேற்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த வழக்கின் பிரதிவாதியான வலய கல்வி பணிப்பாளர் மேற்படி ஆசிரியர் மீதான குற்றப்பத்திரங்களை சமர்ப்பிக்கத் தவறியமையினால் இவ்வழக்கை எதிர்வரும் மே 5ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக மட்டக்களப்பு, மேல்நீதிமன்ற நீதிபதி திருமதி சிவபாதசுந்தரம்  அறிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .