2026 மே 07, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண சபையின் பிராந்திய அலுவலகத்தை மட்டக்களப்பில் திறக்குமாறு கோரிக்கை

Super User   / 2013 ஏப்ரல் 04 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.எல்.ஜவ்பர் கான்

கிழக்கு மாகாண சபையின் பிராந்திய அலுவலகமொன்றை மட்டக்களப்பில் திறக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த கோரிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்நத பொதுமக்கள் மற்றும் அரச அதிகாரிகளினால் விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நஜீப் ஏ மஜீத் பதவியேற்று பல மாதங்களாகியும் இன்னும் பிராந்திய அலுவலகம் மட்டக்களப்பில் திறக்கப்படவில்லை.

இதனால் பொதுமக்களும் அரச அலுவலர்களும் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக திருகோணமலைக்கு செல்ல வேண்டியுள்ளது.

சிவனேசத்துரை சந்திரகாந்தன் முதலமைச்சராக செயற்பட்ட காலத்தில் மட்டக்கனளப்பு நகரில் பிராந்திய அலுவலகமொன்று செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .