2026 மே 07, வியாழக்கிழமை

புதுடில்லியில் உள்ளூராட்சி செயலாற்றுகை: இலங்கை பிரதிநிதிகள் பங்கேற்பு

Kogilavani   / 2013 ஏப்ரல் 04 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன்

இந்தியாவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி செயலாற்றுகை தொடர்பான செயலமர்வில் காத்தான்குடி மற்றும் ஓட்டமாவடி உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

உள்ளூராட்சி செயலாற்றுகை தொடர்பான செயலமர்வு எதிர்வரும் 17ஆம் 18ஆம் திகதிகளில் இந்தியாவின் டில்லியில் நடைபெறவுள்ளது.

இச்செயலமர்வில் கலந்துகொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர், ஓட்டமாவடி பிரதேச சபையின் தலைவர் எஸ்.ஐ.ஹமீட் ஆகிய இருவரும் எதிர்வரும் 16ஆம் திகதி இந்தியாவிற்கு செல்லவுள்ளனர்.

இந்த செயலமர்வு 17ஆம் திகதி காலை ஆரம்பமாகி 18ஆம் திகதி மாலை நிறைவு பெறவுள்ளது.

உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சின் ஏற்பாட்டில் இந்த செயலமர்வில் கலந்து கொள்ளவுள்ளதாக காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .