2026 மே 07, வியாழக்கிழமை

கோயிலுக்குள் புகுந்து பஸ் விபத்து: இருவருக்கு காயம்

Kanagaraj   / 2013 ஏப்ரல் 04 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}



-ரி.எல்.ஜவ்பர்கான்


இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று மட்டக்களப்பு –கல்முனை பிரதானவீதியில் குருக்கள் மடத்தில் இந்து ஆலயமொன்றை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன் கோயிலுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை வேளையிலேயே இந்தச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்று கொண்டிருந்த மட்டக்களப்பு டிப்போவுக்கு சொந்தமான  பஸ்வண்டி எதிரே வந்த காரொன்றுக்கு வழிவிடமுனைந்தபோது பாதையை விட்டு விலகி கோயிலினுள் மதிலை உடைத்துக்கொண்டு புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால், ஆலயத்தின் மதில் சிலைகள் மற்றும் ஆலய கட்டிடத்திற்கும்  பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன என்று தெரிவித்த களுவாஞ்சிக்குடி பொலிஸசார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.





  Comments - 0

  • kriss Friday, 05 April 2013 02:51 AM

    கடவுளுக்கே தன்னை தற்காத்துக் கொள்ள முடியாத நிலை.......!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .