2026 மே 06, புதன்கிழமை

'பணிபெண் வேலைவாய்ப்பை பெண்கள் தாமாகவே விரும்பி தெரிவு செய்வதில்லை'

Kogilavani   / 2013 ஏப்ரல் 05 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


'வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண் வேலைவாய்ப்பு என்பது நீண்ட கால நோக்கில் விமோசனம் தரக்கூடியதொன்றல்ல. வீட்டுப் பணிப்பெண்களாக மத்திய கிழக்கிற்கும் ஏனைய நாடுகளுக்கும் செல்லும் பெண்கள் அவர்கள் தாங்களாக விரும்பி அதனைத் தெரிவு செய்வதில்லை' என சக்தி பெண்கள் அமைப்பின் தலைவி சாமித்தம்பி ருத்ராதேவி தெரிவித்தார்.

இதேவேளை, வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண் வேலைவாய்ப்பு தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நம்பியிருக்கும் பெண்களும் பெண்களின் நலன்களுக்காகப் பாடுபடும் நிறுவனங்களும் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு கடனுதவிகளும் ஆடைகளும்; வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு, சந்திவெளியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், தலைமை தாங்கி உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'எமது பிரதேசப் பெண்கள் கடந்தகால வன்செயல்களால் பலவேறுவகையான பாதிப்புக்களுக்கு உள்ளாகியதன் காரணமாக இன்னும் வறுமையில் உழல்பவர்களாகவே இருக்கின்றார்கள்.

வீட்டுப் பணிப்பெண்களாக மத்திய கிழக்கிற்கும் ஏனைய நாடுகளுக்கும் செல்லும் பெண்கள் அவர்கள் தாங்களாக விரும்பி அதனைத் தெரிவு செய்வதில்லை.

அவர்களது குடும்பச் சூழ்நிலைதான் அவ்வாறானதொரு இக்கட்டான நிர்ப்பந்தத்துக்கு அவர்களைத் தள்ளி விடுகின்றது.

சமூகத்திற்கு ஏதாவது நன்மை செய்து விடவேண்டும் என்று உயர்வான எண்ணங் கொண்டுள்ள எல்லோரும் எமது சக்தி பெண்கள் அமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்தி வெளிநாடு செல்ல உத்தேசித்திருக்கும் பெண்களுக்கு விழிப்புணர்வை ஊட்டவேண்டும்.

நமது உள்ளூர்ப் பிரதேசத்திலேயே இங்கிருக்கின்ற வளங்களைப் பயன்படுத்தி அவற்றின் உச்சப் பயனைப் பெறுவதற்கு உதவவேண்டும்.

அவ்வாறு செய்தால் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக செல்வதைத் தடுக்க முடிவதோடு அதனால் உண்டாகும் பாரதூரமான விளைவுகளையும் தவிர்த்துக் கொள்ள வழியேற்படும்.

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், அநாதரவானவர்கள் போன்றோரையும் அரவணைத்து அவர்களுக்கும் வாழ்க்கைக்கான வழிவகைகளைக் காட்ட வேண்டும்.

அதன் மூலம் பெண்கள் வெளிநாடு சென்று அந்தரித்து போய் நிற்பதையும் அவர்களது குடும்பம் இங்கே சீரழிவதையும் உடன் தடுத்து நிறுத்த முடியும்' என்றார்.




  Comments - 0

  • mattakkalappaan Friday, 05 April 2013 05:37 PM

    சக்திக்கு ஒரு சக்தியாய் ருத்ராதேவி செயல் படுகிரார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .