2026 மே 06, புதன்கிழமை

கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 05 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு, சந்திவெளி பாலையடித்தோனா சிறிமுருகன் வித்தியாலயத்தில்;  கல்வி கற்கின்ற வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள 25 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கனடா மற்றும் அமெரிக்காவிலுள்ள போரினால் காயப்பட்டவர்களுக்கும் விதவைகளுக்கும் வறியவர்களுக்குமான அமைப்பின் உதவி மூலம்
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையால் இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

அப்பியாசக் கொப்பிகள், பேனைகள், பென்சில்கள், அழிறப்பர்கள், கலர் பெட்டிகள், புத்தகப்பைகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் நேற்று வியாழக்கிழமை வழங்கிவைத்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .