2026 மே 07, வியாழக்கிழமை

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிரானில் வீடுகள்

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 05 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சர்வதேச லயன்ஸ் கழகத்தால் அமைக்கப்பட்ட வீடுகளில் 3ஆவது தொகுதி வீடுகளை கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 9ஆம் திகதி கிரானில் நடைபெறவுள்ளது.

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்வதேச லயன்ஸ் கழகத்தினால் 120 வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ், 3ஆவது தொகுதியாக  40 வீடுகள் கையளிக்கப்படவுள்ளன என மட்டக்களப்பு மாவட்ட லயன்ஸ் கழகத்தின் பிராந்திய தலைவர் லயன் ஏ.செல்வேந்திரன் தெரிவித்தார்.

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் கிறவல்குழி பிரதேசத்தில் நடைபெறவுள்ள இதற்கான நிகழ்வில் பிரதம அதிதியாக சர்வதேச லயன்ஸ் கழகத்தின் முன்னாள் தலைவர் லயன் மகேந்திரா அமரசூரிய கலந்துகொள்ளவுள்ளார்.

விசேட அதிதிகளாக கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், முன்னாள் பல்மாவட்ட லயன்ஸ் கழக ஆளுநர்களான லயன் சுனில் தர்மவர்த்தன, லயன் சிவானந்தன், 306 சி மாவட்ட ஆளுநர் லயன் காமினி ஜயசிங்க, பிராந்திய தலைவர் லயன் ஏ.செல்வேந்திரன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏற்கெனவே முதலாம் தொகுதியாக 50 வீடுகள் மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள புதுக்குடியிருப்பில் 2011ஆம் ஆண்டு கையளிக்கப்பட்டன.

2ஆம் தொகுதியாக முறக்கொட்டாஞ்சேனை, கோரளங்கேணி கிராமத்தில் 20 வீடுகள் 2012ஆம் ஆண்டு கையளிக்கப்பட்டன.


  Comments - 0

  • mattakkalappaan Friday, 05 April 2013 05:45 PM

    நல்ல சேவை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .