2026 மே 07, வியாழக்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தை இன்று பெண்களே ஆட்சி செய்கின்றனர்: முரளிதரன்

Kogilavani   / 2013 ஏப்ரல் 06 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன்

'மட்டக்களப்பு மாவட்டத்தை இன்று பெண்களே ஆட்சி செய்கின்றனர்' என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இம் மாவட்டத்தில் பல உயர்நிலை பதவிகளில் இன்று பெண்கள் உள்ளனர். இது நமது மட்டக்களப்பு மாவட்டத்தின் பெண்களின் கல்வி வளர்ச்சியில் முன்னேற்றத்தை காட்டுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

5000 பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நாவற்குடா தருமரட்ணம் வித்தியாலயத்தின் அபிவிருத்தி பணிகளை நேற்று ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக ஒரு பெண்தான் கடமையாற்றுகின்றார். அதே போன்று மட்டக்களப்பு வலயக் கல்விப் பணி;ப்பாளர் மற்றும் பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளராகவும் பெண்களே கடமையாற்றுகின்றனர்.

வாழைச்சேனை பிரதேச செயலாளர், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர், வாகரை பிரதேச செயலாளர் போன்று மாவட்டத்தின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் பெண்கள் பிரதேச செயலாளாகளாக கடமையாற்றுகின்றனர்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .