2026 மே 06, புதன்கிழமை

சிறுவர் கண்காணிப்பு குழுக்களுக்கான கருத்தரங்கு

Kogilavani   / 2013 ஏப்ரல் 06 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எஸ்.சசிக்குமார்


மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள கிராம மட்ட சிறுவர் கண்காணிப்பு குழுக்களுக்கான கருத்தரங்கு நேற்று மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இக் கருத்தரங்கு சிறுவர் பாதுகாப்பு-இலங்கை நிறுவனத்தின உதவியுடன், மட்டக்களப்பு- மேற்கு வலயக் கல்வி திணைக்களம், மண்முனை மேற்கு பிரதேச செயலகம் போன்றவற்றின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏவினால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, நன்னடத்தை உத்தியோகத்தர் எம்.வரதராஜன், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் வு.பிரதாபன் மற்றும் வை.எம்.சி உத்தியோகத்தரகள்; போன்றோர் கலந்துகொண்டு கலந்துரையாடலினை நடாத்தினர்.

இதன்போது கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் கண்காணிப்பு குழுக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .