2026 மே 07, வியாழக்கிழமை

பெண் தொழில் முயற்சியாளர்களின் கண்காட்சி

Kanagaraj   / 2013 ஏப்ரல் 06 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி, தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெண் தொழில் முயற்சியாளர்களின் கண்காட்சியொன்று மட்டக்களப்பில் முதல் தடவையாக வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.வெள்ளிக்கிழமை ஆரம்பமான இக்கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவு பெறவுள்ளது.

மட்டக்களப்பு காவியா பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் உதவியுடன் சர்வதேச தொழிலாளர் ஸ்த்தாபனத்தின் அனுசரணையுடன் இந்த கண்காட்சி நடைபெறுகின்றது.

இந்தக்கண்காட்சியினை ஊக்கு விப்பு உற்பத்தி திறன் விருத்தி அமைச்சர் பசீர் சேகுதாவூத் மீளகுடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் வி.ரங்சித மூர்த்தி நிறைவேற்றுப் காவியா நிறுவனத்தின் பணி;ப்பாளர் திருமதி யோகமலர் அஜித்குமார் சர்வதேச தொழிலளார் ஸ்தாபனத்தின் பிராந்திய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.சிவப்பிரகாசம் உட்பட அதிகாரிகள் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகள் பலரும் கலந்து கொண்டு இதனை ஆரம்பித்து வைத்தனர்.

இந்த கண்காட்சியில் பெண் தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திப்பொருட்களை காட்சி படுத்தியுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் பெண் சுயதொழில் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்கள் பங்கு கொண்டுள்ளனர்.

நூற்றுக்கு மேற்பட்ட கண்காட்சி கூடங்கள் இங்கு நிறுவனப்பட்டுள்ளதுடன்  நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள், அமைப்புக்கள் இதில் பங்கு கொண்டுள்ளன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .