2026 மே 07, வியாழக்கிழமை

முஸ்லிம் அமைச்சர்கள் வடக்கில் காணிகளை சுவீகரிக்கின்றனர் என்பது பொய்: அமைச்சர் பசீர்

Kanagaraj   / 2013 ஏப்ரல் 06 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

வடக்கிலே முஸ்லிம் அமைச்சர்கள் காணி சுவீகரிக்கின்றார்கள் என்று பொய்யான கருத்தை பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். முக்களிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்காமல் ஒன்றுபட்ட இலங்கைகை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஊக்குவிப்பு உற்பத்தி திறன் விருத்தி அமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

மட்டக்களப்பில வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெண் தொழில் முயற்சியாளர்களின் கண்காட்சியினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் பசீர் சேகுதாவூத் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அமைச்சர் பசீர் நாட்டில் யுத்தத்திற்கு பின்னரான இன்றைய காலப்பகுதியில் புதிய இலங்கையை உருவாக்க இன்று முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன.

இந்த புதிய முயற்சியில் நாம் அனைவரும் ஒன்று பட்டு செயற்பட வேண்டும். சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற பிரிவினை வாத  மதவாத சிந்தனைகளை தூக்கி யெறிந்து ஒன்று பட்ட சமூகத்தை உருவாக்க நாம் பாடுபட வேண்டும்.

பொதுபல சேனா எனும் இந்த அமைப்பு இன்று தோல்வியை நோக்கி நகரத் தொடங்கியுள்ள நிலையில் வேறு வழியில்லாமல் முஸ்லிம் அமைச்சர்கள் வடக்கிலே காணிகளை சுவீகரிக்கின்றனர் என்ற ஒரு பொய்யான கருத்தை கூறியுள்ளனர்.

அரசியல் வாதிகள் மதத்தில் தலையீடு செய்வதும் மதவாதிகள் அரசியலில் ஈடுபடுவதும் சிறந்த நடவடிக்கையல்ல. அரசாங்கம் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

எதிர் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உலுத்துப்போன கதையையே இன்னும் கூறித்திரிகின்றார். சிங்கள பகுதிகளில் ஒரு கருத்தையும் தமிழ் முஸ்லிம் பகுதிகளுக்கு வந்து இன்னுமொரு கருத்தையும் கூறுகின்றார்.

சிறுபான்மை மக்களுக்கு அநீதி இடம் பெறுவதாக அன்மையில் மட்டக்களப்புக்கு வந்த ரணில் கூறியுள்ளார்.

சிங்கள பகுதிக்கு சென்று மாறிக் கூறுவார் இந்த உலுத்துப்போன கதையை விட்டு விட்டு புதிய இலங்கையை உருவாக்க எடுக்கும் முயற்சிக்கு ரணில் விக்ரமசிங்கவும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இந்த நாட்டில் தமது மதங்களை கலாசாரத்தை பின் பற்றுவதற்கான சுதந்திரம் அனைவருக்கும் உண்டு இதில் எந்த பொது பல சேனாவும் கை வைக்க முடியாது.

பெரும்பான்மை மக்கள் சிறுபான்மை மக்கள் மீது அன்பை காட்ட வேண்டும். என அமைச்சர் பசீர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0

  • vallarasu Sunday, 07 April 2013 04:10 PM

    இது யாரப்பா? ஒஹோ... நீங்கதான் நானும் ஒரு அமைச்சரா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .