2026 மே 06, புதன்கிழமை

எதிர்காலத்திற்கு முகம்கொடுக்கும் வகையில் தகவல் தொழிற்நுட்பத்தில் மாணவர்களை தயார்படுத்த வேண்டும்: முக

Kanagaraj   / 2013 ஏப்ரல் 06 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா

எமது மாணவ சமூதாயத்தை தகவல் தொழில் நுட்பத்தினூடாக எதிர்கால சவால்களுக்கு முகங் கொடுக்கக் கூடிய தொழில் நுட்பவியலாளர்களாக மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பு எம் ஒவ்வொருவர் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது என தொழில் நுட்ப ஆராய்சி மற்றும் அனுசக்தி அமைச்சின் சிரேஷ;ட உதவிச் செயலாளர் எம்.கே.முகைஸ் தெரிவித்தார்.

தொழில் நுட்ப ஆராய்சி மற்றும் அனுசக்தி அமைச்சின் கீழ் சம்மாந்துறையில் இயங்கி வருகின்ற விதாதா வள நிலையத்தின் மூலம் கணனி கற்கை நெறியினைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

சம்மாந்துறைப் பிரதேச செயலக விஞ்ஞான தொழில் நுட்ப உத்தியோகத்தர் எல்.அஷ;வர் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றுகையில்,

 உலகம் இன்று தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக பாரிய முன்னேற்றங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.

அதற்கு ஈடு கொடுக்க கூடிய வகையில் எமது மாணவ சமூதாயத்தை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டம் இன்று பாடசாலை மட்டங்களிலிருந்து ஆரம்பித்து பல்கலைக் கழகம் வரைக்குமான பாடப் பரப்பில் தகவல் தொழில் நுட்ப செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விNஷடமாக எமது அமைச்சின் மூலம் நாடளாவிய ரீதியில் நிறுவப்பட்டுள்ள விதாதா வள நிலையங்களினூடாக  கணனி தகவல் தொழில் நுட்ப பாடநெறிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது அந்த வகையில் இன்று பாடநெறியினைப் பூர்த்தி செய்து வெளியாகின்ற 75 மாணவர்களினதும் எதிர் காலம் சிறப்படைய வாழ்த்துகின்றேன் எனவும் சிரேஷ;ட உதவிச் செயலாளர் எம்.கே.முகைஸ் தெரிவித்தாh.;

இவ்வைபவத்தில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், கணக்காளர் ஏ.எல.மஹ்றூப், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வை.எம்.றிபாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .