2026 மே 06, புதன்கிழமை

மட்டக்களப்பில் தெங்கு அபிவிருத்திப் பெருவிழா

Kanagaraj   / 2013 ஏப்ரல் 06 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,எஸ்.எம்.எம்.முர்ஷித்


தென்னைப் பயிர்ச் செய்கைச் சபையின் பாசிக்குடா தென்னை மாதிரித் தோட்ட சுற்றாடலில் 5 வது சுற்றுலா விடுதிக்கான அடிக்கல் நடுகை, 'கப்துறுபாய' கட்டிடத்திற்கான அடிக்கல் நடுகை, கிழக்குத் தென்னை அபிவிருத்திப் பயிற்சி நிலையத்தின் திறப்பு விழா, 4 ஆவது சுற்றுலா விடுதி திறப்பு விழா ஆகிய நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வுகளில் தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஸ்பகுமார, மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளீதரன், தென்னைப் பயிர்ச் செய்கைச் சபையின் தலைவர் சரத் கீர்த்திரத்ன, மட்டக்களப்பு மாவட்ட தென்னைப் பயிர்ச் செய்கைச் சபையின் பிராந்திய முகாமையாளர் டபிள்யூ. கே. பமுனு கொத்ஹே, தகவல் ஊடக இணைப்பாளர் ஏ. நவ்பர் அலி, தெங்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். கமால் சப்ரி ஆகியோரும் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தென்னைப் பயிர்ச் செய்கைக்காகத் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங் கன்றுகளும் விநியோகிக்கப்பட்டன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .