2026 மே 06, புதன்கிழமை

குழந்தையை சித்திரவதை செய்த தாய்க்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2013 ஏப்ரல் 06 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எஸ்.வதனகுமார்

தனது ஒன்றரைவயது குழந்தையை கடித்தும் அடித்தும் நெருப்பினால் சுட்டும் மண்ணெண்ணை பருகக்கொடுத்தும் சித்திரவதை செய்த தாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

புதுமண்டபத்தடிக் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட இருட்டுச்சோலைமடுவைச்சேர்ந்த தாயொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கணவன் தன்னைக் கொடுமைப்படுத்தியதனால் தனது குழந்தையை சித்திரவதை செய்து வந்த பெண்ணையே வவுணதீவுப் பிரதேச செயலக அதிகாரிகள் நேற்று மாலை மீட்டதுடன் குறித்த தாயையும் குழந்தையையும் வவுணதீவுப் பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த இளம் தாய் தனது ஒரு வயதும் இரண்டு மாதமும் உடைய குழந்தையை நீண்ட நாட்களாக  கடித்தும் அடித்தும் நெருப்பினால் சுட்டும் சித்தரவதை செய்தும் வந்ததுடன் வியாழக் கிழமை இரவு மண்ணெண்ணை பருகக் கொடுத்தும் கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

மண்ணெண்ணை பருக்கிய நிலையில் அக்குழந்தையை சிறுவர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் புதுமண்டபத்தடி கிராமிய வைத்திய சாலையில் தனது பாட்டியுடன் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில் குழந்தையை பாட்டி வெள்ளிக்கிழமை வீட்டிற்குக் கொண்டு சென்ற நிலையில் குறித்த தாய் குழந்தையை மீண்டும் சித்திரவதை செய்ததுடன் தூக்கி வீசி கொலை செய்யவும் முயற்சித்துள்ளார்.

இந் நிலையில் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தைப் பிரிவிற்கு அயலவர்கள் வழங்கிய தகவலை அடுத்து பிரதேச செயலாளர் வெ.தவராஜாவின் உத்தரவிற்கமைய கிராம சேவை அதிகாரி க.வரதராசா,சிறுவர் நன்னடத்தை அதிகாரி எம்.வரதராஜன்,சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர் பிரதிபன் மற்றும் சூரியா பெண்கள் அமைப்புப் பிரதிநிதிகள் சென்று குழந்தையை மீட்டதுடன் குழந்தையையும் தாயையையும் வவுணதீவுப் பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

இதனை அடுத்து குழந்தையையும் தாயையும் பொலிஸார் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படுத்;திய போது குழந்தையை சிகிச்சைக்காக மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் தாயை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .