2026 மே 09, சனிக்கிழமை

வெலிகாகண்டி குளத்தினூடான பிரதான வாயில்களை திருத்தும் நடவடிக்கையில் பொதுமக்கள்

Kogilavani   / 2013 ஏப்ரல் 07 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


ஏறாவூர் பற்று, வெலிகாகண்டி கிராம மக்கள் தமது வேளாண்மை செய்கைக்காக உடைந்து போயிருக்கும் வெலிகாகண்டி குளத்தினூடான பிரதான பாய்ச்சல் பிரதேசத்தினை திருத்தும் வேலைகளை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்காலிக ஏற்பாடாக தமது சொந்த நிதியிலிருந்த இதனை மேற்கொள்வதாகத் தெரிவித்த வெலிகாகண்டி மக்கள், இதனை நிரந்தரமாகவும் முழுமையாகவும் திருத்தித் தருவதற்கும் வாய்க்கால்களின் ஊடாக விவசாய நீரைப் பெற்றுக் கொள்வதற்கும் அரசாங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.

'கடந்த வருடம் வயல்களுக்கான நீர் பாய்ச்சமுடியாது போனமையினால் விதைத்துப் பயிரான 60 ஏக்கர் நிலம் கைவிடப்பட்டது. இதனால் நஸ்டம் ஏற்பட்டது. அவ்வாறானதொரு நிலை இந்த வருடமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விவசாயிகளாக சேர்ந்து வெலிகாகண்டி குளத்தின் ஊடான பிரதான வாயில்களை திருத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம்'  என இதன்போது, வெலிகாகண்டி கமநல அமைப்பின் தலைவர், இராசையா செல்வநாயகம் தெரிவித்தார்.

கடந்த மாதம் மார் மாதம் 4ஆம் திகதி ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விவசாய ஆரம்பக் சுட்டத்தில் 300 ஏக்கருக்கு நீர் தருவதாக உறுதியளிக்கப்பட்டது.

ஆனாலும் இந்த குறிப்பிட்ட வாய்க்காலைச் செய்யாது போனால் எங்களால் அவர்கள் குறிப்பிட்ட அளவான விவசாய நிலத்தில் வேளாண்மை செய்கை பண்ணமுடியாது.

அதனால், இந்த கோஸ்வே-முறிவை திருத்தி 200 ஏக்கர் வரையாவது செய்கை பண்ண வேண்டும் என்பதற்காக இதனை நாங்களாக இணைந்து திருத்துகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .