2026 மே 09, சனிக்கிழமை

dd

'உறங்கியோரை யானைக்காட்டில் விட்டு விட்டு சென்ற ரயில்'

Kogilavani   / 2013 ஏப்ரல் 10 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அரைசொகுசு கடுகதி ரயிலொன்று யானைக்காட்டில் அதுவும் நள்ளிரவில் இரண்டு பெட்டிகளை விட்டு விட்டு சென்றமையினால் பயணிகள் பெரும் அல்லோலகல்லோலப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரைசொகுசி கடுகதி ரயிலின் சில பெட்டிகளே கல்லோயாவுக்கும் ஹபரணைக்கும் இடைப்பட்ட யானைக்காட்டுப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கழன்றுகொண்டன.

2 ஆம் வகுப்பு உறங்கலிருக்கைக்கும் 3 ஆம் வகுப்புக்கும் இடையில் உள்ள கொழுவி கழன்றதானாலேயே புகையிரதப் பெட்டிகள் நடுக்காட்டில் துண்டித்து விடப்பட்டன.

இதனால் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் பெரும் அல்லோலகல்லோலப்பட்டதுடன் இரவு நேரம் என்பதனால் பயத்தில் அந்தரித்தனர்.

பெட்டிகள் கழன்றுக்கொண்டமையினால் அந்த ரயில் பயணத்தில் சுமார் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டதாக கல்லோயா புகையிரத நிலைய அதிபர் தெரிவித்தார்.

புகையிரதம் நெழிவு சுழிவாகச் செல்லும்பொழுது குலுக்குப்படுவதால் சில சமயங்களில் இவ்வாறு ரயில் பெட்டிகள் கழன்று பிரதான புகையிரதத்துடனிருந்து துண்டிப்பட்டது என கல்லோயா புகையிரத நிலைய அதிபர் மேலும் கூறினார்.

துண்டிக்கப்பட்ட  பெட்டியிலிருந்த புகையிரத உத்தியோகத்தர்கள் விரைந்து செயற்பட்டு சம்பவம் தொடர்பில் அருகிலுள்ள புகையிரத நிலையங்களுக்குத் தகவலை அனுப்பினர்.

இதனையடுத்து முன்னோக்கிச் சென்ற என்ஜினுடனான பிரதான புகையிரதம் பின்னோக்கிச் செலுத்தப்பட்டு கழன்று போன பெட்டிகள் மீண்டும் இணைக்கப்பட்டுப் சுமார் ஒரு மணிநேரத்திற்கு பின்னர் பயணம் தொடரப்பட்டது.

பெட்டிக்கள் கழன்றுக்கொண்ட அந்த காட்டுப்பகுதியில் காட்டுயாணைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0

  • SH Wednesday, 10 April 2013 12:01 PM

    தப்பிச்சாங்க

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .