2026 மே 07, வியாழக்கிழமை

சமுர்த்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டம்

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 18 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


இலங்கை அரசாங்கத்தின் வறுமை ஒழிப்புத் திட்டமான சமுர்த்தித் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான வேலைத்திட்டங்கள்; முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கு இந்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டம் மட்டக்களப்பு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சமுர்த்தித் திட்ட பிரதிப் பணிப்பாளர் பி;.குணரெட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவிக்கையில், சமுர்த்தி வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள 2,000 மில்லியன் ரூபாவை பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு வழங்க வேண்டும் எனக் கூறினார். இதில் சகல ஊழியர்களும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .