2026 மே 07, வியாழக்கிழமை

அபிவிருத்தி திட்டங்களை காத்தான்குடி நகரசபை உறுப்பினர்கள் பார்வை

Kogilavani   / 2013 ஏப்ரல் 19 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன்


காத்தான்குடி நகரசபை பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களை காத்தான்குடி நகரசபையின் பதில் முதல்வர் எம்.ஐ.எம்.ஜெஸீம் தலைமையிலான நகரசபை உறுப்பினர்கள் குழு நேற்று  சென்று பார்வையிட்டது.

இதன்போது காத்தான்குடியில் அமைக்கப்பட்டுவரும் மாடு அறுக்கும் மடுவம், திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்காக அமைக்கப்பட்டுவரும் கட்டிடம், காத்தான்குடி கடற்கரையில் தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு பூங்கா போன்றவற்றை இக் குழு பார்வையிட்டது.

அத்தோடு புதிய காத்தான்குடி நூறாணிய்யா மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் வடிகான் அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி வேலைகள்,  தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீதிகள், என்வற்றையும் இக்குழுவினர் பார்வையிட்டனர்.

நிர்மாணக்கப்பட்டுவரும் வீதி அபிவிருத்தி மற்றும் வடிகான்கள் அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் விரைவாக செய்து முடிக்குமாறும் அதிகாரிகளுக்கு இதன்போது அறிவுறுத்தலும் ஆலோசனையும் வழங்கப்பட்டன.

காத்தான்குடி நகரசபை பதில் முதல்வர் எம்.ஐ.எம்.ஜெஸீம், காத்தான்குடி நகரசபை உறுப்பினர்களான எச்.எம்.எம்.பாக்கீர், எம்.அலி சப்ரி, எம்.எஸ்.சியாத், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் ஆகியோர் இதன்போது இந்த அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட சென்றிருந்தனர்.



  Comments - 0

  • vallarasu Friday, 19 April 2013 11:30 AM

    எப்புடி பில்டப் ப‌ன்னுராங்கோ....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .