2026 மே 07, வியாழக்கிழமை

ஆரையம்பதியில் வீடு புகுந்து தாக்குதல்; சிறுவர்கள் இருவர் காயம்

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 19 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வீடொன்றினுள் புகுந்த சிலர் அவ்வீட்டிலிருந்தோரை தாக்கியதில் சிறுவர்கள் இருவர் காயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். 

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள அமரசிங்கம் வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலேயே நேற்று வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆரையம்பதி அமரசிங்கம் வீதியில் வசித்து வரும் கே.கண்ணதாஸ் என்பவரின் வீட்டுக்குள் நேற்று வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் புகுந்த சிலர் அங்கிருந்தோரை தாக்கியதுடன், வீட்டிலிருந்த உடைமைகளையும் சேதப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கே.கண்ணதாஸனின் பிள்ளைகளான லதுசனா (வயது 3), றதுசன் (வயது 4) ஆகிய சிறுவர்கள் காயமடைந்த நிலையில் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முக்கியஸ்தர் ஒருவரினுடைய சகோதரன் தலைமையில் வந்த குழுவினரே தாக்குதல் நடத்தியதாக வீட்டு உரிமையாளரான கே.கண்ணதாஸ் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .