2026 மே 07, வியாழக்கிழமை

கைவினைப் பயிற்சிநெறி ஆரம்பிப்பு

Kogilavani   / 2013 ஏப்ரல் 20 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வ.சக்திவேல்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான கைவினைப் பயிற்சிநெறி ஒன்று நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப்பயிற்சி நெறியில் 'பன்' மூலப்பொருளினைக் கொண்டு தொப்பி, பூத்தட்டு, மற்றும் அலங்காரப் பொருட்கள் போன்றன உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனை செய்யப்படவுள்ளன.

'உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பு' இன் மூலம் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் போரதீவுப்பற்று பிரிவினூடாக மேற்கொள்ளப்படும் இச்செயற்றிட்டத்திற்கு போரதீவுப்பறு பிரதேசத்திலிருந்து பாதிக்கப்பட்ட 25 பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் போரதீவுப் பற்று பிரிவுத் தலைவரின்; தலைமையில் நடைபெற்ற பயிற்சி நெறியின் ஆரம்பிப்பு நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் தலைவர் கமலதாஸ், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் கிளை நிறைவேற்று உத்தியோகஸ்தர் பிறேமகுமார், உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பின் பணிப்பாளர் கங்காதரன், போரதீவுப்பற்று சமூக நலம்புரி அமைப்பின் இணைப்பாளர் பிறேமா உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .