2026 மே 07, வியாழக்கிழமை

'கட்டாக்காலி நாய்களுக்கு கர்ப்பத்தடை'

Kanagaraj   / 2013 ஏப்ரல் 20 , பி.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}



-ரி.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டாக்காலி நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுகாரார அமைச்சின் அனுசரணையுடன் சுகாதரார சேவைகள் திணைக்களத்தினால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் நாவற்குடா, கல்லடி, காத்தான்குடி நகர சபைபிரிவில் ஏத்துக்கால், பிர்தௌஸ்நகர், அன்வர் கிராமம் உட்பட பல கரையோர பிரதேசங்களில் இன்று முழுநாளும் இச்சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட பிரதி மாகாண சுகாதரா சேவைகள் பணியகத்தின் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையின் கீழ் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

விலங்கியல் வைத்திய நிபுணர்களான டாக்டர் நளின் ராஜபக்ஸ மற்றும் டாக்டர் மலிந்த பண்டார தலைமையிலான மருத்துவர்கள் குழுவினால் இச்சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

நாளொன்றிற்கு 100 நாய்களுக்கு சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .