2026 மே 06, புதன்கிழமை

முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கான ஊக்கவிப்பு விரைவாக வழங்குமாறு கோரிக்கை

Super User   / 2013 ஏப்ரல் 21 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கான மாதாந்த ஊக்கவிப்பு கொடுப்பனவை விரைவாக வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணத்தினால் இந்த கோரிக்கை முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீதிடம் விடுக்கப்பட்டுள்ளது.

2014ஆம் அண்டு முதல் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுப்பதாக மாகாண முதலமைச்சர் அண்மையில் கூறினார்.

இதனையடுத்து முன்பள்ளி ஆசிரியர்கள் தன்னை சந்தித்து முறைப்பாடு செய்தமை தொடர்பில் விடுத்துள்ள வேண்டுகோளிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக துரைரெட்ணம் முதலமைச்சரிடம் விடுத்துள்ள வேண்டுகோளில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

"முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவு 2014 இல் இருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மாகாண சபையில் தெரிவிக்கப்பட்டது தொடர்பாக முன்பள்ளி ஆசிரியர்கள் பலர் விரக்தி அடைந்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் அண்ணளவாக 1,500 முன்பள்ளி பாடசாலைகள் உள்ளன. இதில் 2,800 மேற்பட்ட ஆசிரியர்களும் உள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 600 பாடசாலைகளும் 1,200 ஆசிரியர்களும்  உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எவ்விதகொடுப்பனவும்  இன்றி 400ற்கு மேற்பட்டோர் கடமையாற்றுகின்றனர். இந்த நிலையில் பல சிரமத்திற்கு மத்தியில் சேவையாற்றி வந்த முன்பள்ளி ஆசிரியர்களை கிழக்கு மாகாண சபை முன்பள்ளி பணியகம் ஒன்றை ஆரம்பித்து அதன் முலம் ஆசிரியர்களை ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்மு நியதிச் சட்டங்களை உருவாக்கியது.

அத்துடன் ஸ்தாபன விதிமுறையை ஏற்படுத்தி பொதுவான பாடவிதானமொன்றைத் தயாரித்து ஆசிரியர்களுக்கான வழிகாட்டி நூல் போன்றவற்றையும் தயாரித்து சரியானதொரு விபரத்திரட்டை தயாரித்து ஆசிரியர்களின்  நலன்கள் தொடர்பான பயிற்சிகளை வழங்கி செயல்பட ஆரம்பித்துதிருந்தது.

இவைகளில் சில தேவைகளை தொண்டு நிறுவனங்கள் ஊடாகவே பூர்த்தி செய்யவேண்டியதேவை இன்று வரைஉள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது.இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் தொண்டாற்றி  வருகின்ற முன்பள்ளி ஆசிரியர்கள் பலர் என்னை சந்தித்து தாங்கள்  பல வருடங்களாக மாதாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு தருவதாககூறி ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

முன்பள்ளி கல்வியை பொறுத்த மட்டில் ஏனைய மாகாண சபைகள் சிறப்பாக செயல்படுத்தும் போது கிழக்கு மாகாண சபை ஏன் அக்கறையீனமாக உள்ளது. இதுமட்டுமின்றி இது எமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் ஒன்று.

இவ்விடயத்தில் மாகாண சபை சிறப்பாக செயலாற்ற முடியும். தற்சமயம் முன்பள்ளி பாடசாலைகள் உள்ளுராட்சி திணைக்களங்கள் ஊடாகவும், மாகாண கல்வி அமைச்சி ஊடாகவும், நியதிச்சட்டங்களை உருவாக்கி முதலமைச்சின் ஊடாகவும், மத்திய அரசுஊடாகவும் ஊக்குவிப்பு கொடுப்பனவுக்கான  நிதியை ஒதுக்கமுடியும்.

விசேட திட்டத்தின் முலம்  செயல்படுத்தக் கூடிய அதிகாரங்களை கையில் வைத்துக்கொண்டு முன்பள்ளி கல்வியை சிதைக்க விடுவது ஏற்புடையதல்ல.ஆளும் தரப்பினரின் அமைச்சரவையின் கவனக்குறைவால்  கிழக்கு மாகாணத்தில் முன்பள்ளிக் கல்வி பாதிக்கப்படுகின்றன. எனவே விரைவாக முன்பள்ளி பாடசாலையின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவை இவ்வருடமே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .