2026 மே 07, வியாழக்கிழமை

அரச சார்பற்ற நிறவனங்களினால் கட்டப்பட்ட கட்டிடங்கள் பூட்டப்பட நிலையில்

Super User   / 2013 ஏப்ரல் 21 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பிரதேச செயலாளர் பிரிவுகளில் அரச சார்பற்ற நிறவனங்களினால் கட்டப்பட்ட 70க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இதுவரை பூட்டப்பட்ட நிலையிலுள்ளது என மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த மாவட்ட செயலாளர்,

"மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பிரதேச செயலாளர் பிரிவுகளில் அரச சார்பற்ற நிறவனங்களினால் கட்டப்பட்ட 70க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இதுவரை பூட்டப்பட்ட நிலையிலே உள்ளன. அதுபோன்று பல தொழிற்சாலைகளும் இயங்காத நிலையிலுள்ளன. அவைகளை நான் வீடியோ செய்துள்ளேன். சம்பந்தப்பட்ட பிரதேசங்களின் பிரதேச செயலாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அதை காண்பித்து அவற்றை இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் அனுமதியினை பெற்றுக்கொள்ள வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவங்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும் அதே அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்யும் அமைச்சிலும் அனுமதியினை பெற்றுக் கொண்டே செயற்பட வேண்டும்.

சில அரச சார்பற்ற நிறுவனங்கள் பிரதேச செயலகங்களின் அனுமதியை மாத்திரம் பெற்று செயற்படுகன்றன. அவ்வாறில்லாமல் மாவட்ட செயலகத்தின் அனுமதியினையும் அமைச்சின் அனுமதியினையும் பெற்றக்கொள்ள வேண்டும்.
தனியே அரச சார்பற்ற நிறுவனங்கள் மாத்திரம் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற் கொள்ளவில்லை. அரசாங்கம் அதிகமான அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டுள்ளது" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .