2026 மே 06, புதன்கிழமை

தமிழர்களின் அரசியல் நிலைமை வழுக்கு மரம் ஏறுவதைப் போலாகிவிட்டது: ஜனா

Kogilavani   / 2013 ஏப்ரல் 22 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


'தமிழர்களின் அரசியல் நிலைமை வழுக்கு மரம் ஏறுவதைப் போலாகிவிட்டது. மிகவிரைவில் அரசியல் இலக்கை எமது இனம் அடையும்' என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தம் கருணாகரம்(ஜனா) தெரிவித்தார்.
மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு டொல்பின் விளையாட்டுக்கழகத்தின் விளையாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 

'நவீன தொழில்நுட்பமானது நெருப்பு போன்றது. அதனைச் சமையலுக்கும் பயன்படுத்தலாம், வீட்டை எரிப்பதற்கும் பயன்படுத்தலாம். தொலைபேசி, இணையம்; போன்றவைகளும் அப்படியே. இந்த தொழில்நுட்பத்தினை தவறாக வீட்டை எரிப்பதற்குச் சமமாகப் பயன்படுத்தியதன் விளைவே செங்கலடியில் நடைபெற்ற சம்பவமாகும்.

சைவமும் தமிழும் வளர்ந்துவர பாரம்பரியக் கலை, கலாசாரங்களைப் பேணிப்பாதுகாத்துக்கொண்டு இன்றும் சுயதொழில் மூலமாக படிப்படியாக முன்னேறி வருகின்ற மக்களைக் கொண்ட ஒரு ஒற்றுமையான கிராமம் புதுக்குடியிருப்பு.

விளையாட்டு என்பது ஒரு தனி மனிதனுக்காகவோ, அரசியலுக்காகவோ, இன, மத, மொழி பேதற்களுக்காகவோ உருவாக்கப்பட்டதல்ல. நாள்
முழுவதும் பாடுபடுகின்ற மனிதன் தனது அலுப்பை போக்கவும், மகிழ்ச்சியாக இருக்கவும் விளையாட்டு உறுதுணையாக இருக்கிறது.

உடல், உள, ஆரோக்கியத்தினையும் ஐக்கியத்தனையும், ஒற்றுமையையும் ஏற்படுத்துவதுதன் ஊடாக அபிவிருத்தியையும் ஏற்படுத்த உதவுகின்றது' என  தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .