2026 மே 06, புதன்கிழமை

நாவற்குடா கிழக்கில் முன்பள்ளி கட்டிடம் திறப்பு

Kogilavani   / 2013 ஏப்ரல் 22 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு, நாவற்குடா கிழக்கில் நிர்மாணிக்கப்பட்ட முன்பள்ளி பாடசாலைக் கட்டிடம் இன்று திங்கட்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.
வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேசத்திலுள்ள சிறுவர்களின் நலன்கருதி; இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இக் கட்டிடத்தை 'மனிதகுலத்துக்கான வீடமைப்பு திட்டம்' எனப்படும் ஹபிடட் நிறுவனமும் கொக்காகோலா நிறுவனமும் இணைந்து நிர்மாணித்துள்ளன.

மேற்படி நிறுவனங்களில் 15இலட்சம் ரூபா நிதிதொகையில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

கட்டிட திறப்பு விழா நிகழ்வில், ஹபிடட் நிறுவனத்தின தேசிய வதிவிட பணிப்பாளர் டோனி செனவிரட்ன மற்றும் கொக்காகோலா நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான முகாமையாளர் அபிசேக் ஜகன், கொக்காகோலா நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிட பணிபபாளர் கபில வெலிகம உட்பட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிறிதரன் மற்றும் அதன் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .