2026 மே 06, புதன்கிழமை

அரசாங்கம் தமிழ் மக்களை தாம் புறக்கணிப்பதாக ஒத்துக்கொண்டுள்ளது: அரியநேத்திரன்

Kogilavani   / 2013 ஏப்ரல் 22 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வ.சக்திவேல்


'தமிழ் மக்கள் வாழும் பெரும்பாலான கிரமங்கள் அபிவிருத்தி செய்யப்படவில்லை. அதுவும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கும் கிராமங்கள் முற்றாக அபிவிருத்தியில் அரசு புறக்கணித்து வருகின்றது என்பதை அரசாங்கத்தின் பிரத்தியமைச்சர் விநாயகமூர்தி முரளிதரன் அண்மையில் கூறியிருந்தார். இதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால் அரசாங்கமே தமிழ் மக்களை தாம் புறக்கணிப்பதாக ஒத்துக்கொண்டுள்ளது' என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்

'தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஆதரவு வழங்கும் கிராமங்களில் அபிவிருத்திகள் என்பது எட்டாக் கனியாகவேயுள்ளது. இதனை நாம் நேரடியாகவும் கிராம மக்களின் வாயிலாகவும் கண்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

முனைத்தீவு மேம்பவர் விளையாட்டுக் கழகத்தின் புதுவருட விளையாட்டு விழாவும், சாதனையாளர் கௌரவிப்பும் நேற்று முன்தினம் முனைத்தீவு சக்தி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நiபெற்றது.

இந்நிகழ்வில கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்

'எம் இனம் என்றென்றும் எவருக்கம் சோரம் போகாது. நிச்சயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வருகின்ற உள்ளூராட்சி மன்ற சபைத்தேர்தலில் வெற்றிபெறும். அதனூடாக தமிழ் பிரதேச சபைகளை தமிழ் தேசயக் கூட்டமைப்பு கைப்பற்றும். அதனை வைத்துகொண்டு தழிழ் கிராமங்கள் அனைத்தும் மிகவிரைவில் அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச்செல்லப்படும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.
 
இது ஒருபுறருமிக்க எம்மக்களினது ஒழுக்கத்தினைச் சீர்குலைப்பதற்கு பல காய் நகர்த்தல்கள் வெவ்வேறு விதங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

மட்டக்களப்பு படுவான்கரையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி வைத்திருந்ததை அப்பாடலை அதிபர் கண்டித்துள்ளார். அதனை அறிந்த அருகிலிருந்த இராணுவத்தினர் பாடசாலை அதிபரிடம் போய் மாணவர்கள் எப்படியாவது தமது செயற்பாடுகளை மேற்கொள்ளட்டும். நீங்கள் சத்தம் போடாமலிருங்கள் என குறித்த அதிபரைக் எச்சரித்துள்ளனர்.

இச்சம்பவத்தினூடாக எமது தமிழ் மக்களை அடிமட்டத்திலிருந்து சீர்குலைப்பதற்கு பல காய்நகர்த்தல்களும் செயற்பாடுகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதே புலனாகிறது' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .