2026 மே 06, புதன்கிழமை

பாலமீன்மடு பகுதியில் மண்ணெண்ணெய் எரிபொருள் விற்பனை நிலையம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 22 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன், ரீ.எல்.ஜௌபர் கான்


மட்டக்களப்பு மாவட்டத்தின் பாலமீன்மடு பகுதியில் அமைக்கப்பட்ட மண்ணெண்ணெய் எரிபொருள் விற்பனை நிலையத்தை அம்மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் திறந்துவைத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாலமீன்மடு லைட்ஹவுஸ் கிராமிய கடற்றொழில் அமைப்பின் முகாமைத்துவத்தின் கீழுள்ள மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் எரிபொருள் விற்பனை நிலையமே இன்று திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் நீரியல்வளங்கள் பிரிவின் கீழுள்ள சர்வதேச விவசாய அபிவிருத்தி நிதி நிறுவனம்; இம்மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைப்பதற்காக 12 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளங்கள் திணைக்களத்தின்  உதவிப் பணிப்பாளர் டொமிங்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.
 
காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள மண்ணெண்ணெய் மற்றும் டீசல்; எரிபொருள் நிரப்பு நிலையம் அடுத்ததாக திறந்து வைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பிரதேசங்களில் 9 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையம் மூதூரில் திறக்கப்பட்டு செயற்படுகின்றது. இரண்டவதாக பாலமீன்மடு பகுதியில் திறந்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாலமீன்மடு லைட்ஹவுஸ் கிராமிய கடற்றொழில் அமைப்பின் தலைவர் க.பிரேமன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .