2026 மே 06, புதன்கிழமை

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் மாணவியை வல்லுறவுக்குட்படுத்த முயற்சி

Super User   / 2013 ஏப்ரல் 22 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி நகர சபை உறுப்பினரொருவர் மாணவியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்துள்ள சம்பவம் ஒன்று இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் பொலிஸில் இன்று திங்கட்கிழமை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி பிரதேசத்தை சேர்ந்த இந்த மாணவி காத்தான்குடி பிரதேசத்தில் தங்கி கல்வி பயின்று வருகின்றார்.

குறித்த மாணவியை நகர சபை உறுப்பின் தனது காரில் கல்முனை பிரதேசத்திலுள்ள தனியார் கல்வி நிலையமொன்றுக்கு இன்று அழைத்துக் சென்றுள்ளார். அங்கிருந்து காத்தான்குடிக்கு திரும்பி வரும்போதே அம்மாணவி மீது பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்துள்ளார்.

இந்நிலையில், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வைத்து காரை விட்டு இறங்கி அந்த மாணவி இது தொடர்பில் பிரதேசவாசிகளிடம் முறையிட்டுள்ளார். இதனையடுத்து அந்த மாணவியை பிரதேசவாசிகள்  காத்தான்குடி அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் காரியாலயத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

அந்த அலுவலகம் மூடப்பட்டிருந்தமையினால் அந்த மாணவியை பிரதேசவாசிகள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனையடுத்து குறித்த மாணவி மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான சந்தேகநபரான காத்தான்குடி நகர சபை உறுப்பினர் கைது செய்யப்படுவார் என தெரிவித்த காத்தான்குடி பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0

  • aj Monday, 22 April 2013 01:16 PM

    அதிக கட்டுப்பாடு இருக்கும் இடத்தில தான் கட்டுப்பாட்டை மீறிய செயல்பாடுகளும் நடைபெறும் என்பதுக்கு இந்த பிரதேசம் சரியான உதாரணம்.

    Reply : 0       0

    aj Monday, 22 April 2013 01:17 PM

    இதற்கு தண்டனையா ..... வெட்டப்படுமா ? டவுட்டு:)

    Reply : 0       0

    vallarasu Monday, 22 April 2013 03:13 PM

    இவர்களை எல்லாம் நடு ரோட்டில் வைத்து கொல்ல வேண்டும்...

    Reply : 0       0

    IBNU ABOO. Monday, 22 April 2013 04:27 PM

    டெல்லி வைரஷ் இங்கும் பரவிவிட்டது. இந்த மாணவியும், அவள் பெற்றோர் அல்லது பாதுகாவலரும் இதற்கு முதல் பொறுப்புதாரிகள்.

    Reply : 0       0

    நவாஸ் Monday, 22 April 2013 06:21 PM

    டுயூசனுக்கு காத்தான்குடியில் போன பிள்ளை என்கிறார்கள். பின்னர் கல்முனைக்கு கார் போனது என்கிறார்கள், கல்முனைக்குப் போய் எவ்வளவு நேரம் கழித்து வந்தார்களாம். அடிக்கடி கல்முனைக்கு போனார்களா?

    கல்முனைக்கு போகும்போது, முன் சீட்டு பின்சீட்டு என்கிறார்கள் -கல்முனை என்ன காத்தான்குடியிலிருந்து 200M தூரத்திலா உள்ளது.
    திரும்பிவரும்போது,என்கிறார்கள் -புதுக்குடியிருப்பு என்கிறார்கள்.

    என்னங்கடா புரியமாட்டேங்குதே... அல்லாஹ் நீயேதான் உள்ளந்தரங்கங்களை அறியும் ஆற்றலுள்ளவன்.அறிபவன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .