2026 மே 07, வியாழக்கிழமை

த.தே.கூ தூதுக்குழுவினார் வாகரை விஜயம்

Super User   / 2013 ஏப்ரல் 22 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழுவினார் இன்று திங்கட்கிழமை வாகரை பிரதேசத்திற்கான விஜயத்தை மேற்கொண்டனர். இதன்போது, பொதுமக்கள் மற்றும் அரச அதிகாரிகளை நேரில் சந்தித்து நிலமைகளை கேட்டறிந்து கொண்டனர்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியனேந்திரன், சீ.யோகேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார்,  இரா.துரைரெட்ணம், கி.துரைராஜசிங்கம், ஞா.கிருஸ்ணப்பிள்ளை மற்றும் மா.நடராஜா,ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

இவர்கள் பிரதேச செயலகம், பிரதேச சபை, இலங்கை போக்குவரத்து சபை, கதிரவெளி விக்கினேஸ்வரா வித்தியாலயம் உட்பட பல இடங்களுக்கு விஜயம் செய்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .