2026 மே 06, புதன்கிழமை

வாகரையில் புதையல் தோண்டிய அறுவர் கைது

Super User   / 2013 ஏப்ரல் 22 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

வாகரை, கிருமிச்சை பிரதேசத்தில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆறு பேரை இராணுவத்தினர் இன்று புதன்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.

கிருமிச்சை - சின்னக்கல் என்னும் காட்டு மலைப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான சிலர் மலை பகுதியை உடைத்துக் கொண்டிருப்பதை கண்ட பொதுமக்கள் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து இவர்கள் தப்பியோட முயற்சித்தபோது, மியான் குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது புதையல் எடுப்பதற்க்காக பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபர்களை இராணுவத்தினர் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்கள் நாளை செவ்வாய்க்கிழமை வாழைச்சேனை நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்தவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .