2026 மே 09, சனிக்கிழமை

dd

மாணவியிடம் தவறாக நடக்கவில்லை: எச்.எம்.பாக்கீர்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 26 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன்

'ஓட்டமாவடியைச் சேர்ந்த மாணவியொருவரிடம் நான் தவறாக நடக்க முற்பட்டதாகவும் அந்த மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாகவும் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் காத்தான்குடி பள்ளிவாயல் ஒன்றில் சத்தியம் செய்யவுள்ளேன். உண்மையில் எனக்கும் இந்த குற்றச்சாட்டுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை' என காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எச்.எம்.பாக்கீர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'அல்லாஹ்மீது ஆணையாக நான் குறித்த மாணவியை எந்த தவறான என்னத்துடனும் எனது காரில் அழைத்துச் செல்லவில்லை. எதற்காக நான் அழைத்துச் சென்றேன் என்பதை விரைவில் ஊடகங்களின் மூலம் பகிரங்க அறிக்கையாக வெளியிடவுள்ளேன்.

அல்லாஹ் மீது ஆணையாக நான் அம்மாணவியுடன் தவறாக நடந்து கொள்ளவில்லை. என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றசாட்டு தொடர்பில் காத்தான்குடி பள்ளிவாயலில் அழிவுச் சத்தியம் செய்யவுள்ளேன்.

என்னை திட்டமிட்டு சிலர் அவமானப்படுத்தி வருகின்றனர். நான் ஆயிரக்கணக்கான மாணவிகளுக்கு பல ஆண்டுகாலமாக கல்வி கற்றுக் கொடுத்துள்ளேன். அதில் ஒரு மாணவியாவது என்னை மோசம் என்று இதுவரை சொல்லியுள்ளனரா? என்றும் நான் கேட்க விரும்புகின்றேன். என் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் பூரணமான அறிக்கையை விரைவில் வெளியிடுவேன்' எனவும் அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .