2026 மே 09, சனிக்கிழமை

dd

மட்டு. நன்னடத்தை திணைக்கள அதிகாரி மீது தாக்குதல்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 27 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன், தேவ அச்சுதன், எம்.சசிகுமார்

கடமை நிமித்தம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்ற நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள நன்னடத்தை நிகழ்ச்சித் திட்ட உத்தியோகஸ்தர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தரால் தாக்கப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றில் உள்ள சிறுவர் வழக்கு தொடர்பான விடயமாக கடமை நிமித்தம் சென்று வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியை சந்திப்பதற்காக வெளியே நின்ற சந்தர்ப்பத்தில் வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவருடன் கதைத்துக்கொண்டிருந்த போது அங்க வந்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கான பொறுப்பதிகாரி திடிரென தாக்கியதால் மயங்கி வீழ்ந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நன்னடத்தைத் திணைக்களத் தகவல் தெரிவிக்கின்றது.

டி.ரவிச்சந்திரன் என்பவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார். இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .