2026 மே 06, புதன்கிழமை

கண் பரிசோதனையும் மூக்குக்கண்ணாடி வழங்கலும்

Super User   / 2013 ஏப்ரல் 29 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


கண் பரிசோதனையும் மூக்குக்கண்ணாடி இலவசமாக வழங்கும் நிகழ்வும் கடந்த சனிக்கிழமை ஓட்டமாவடி தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாக் கிளையினால் சமூக சேவைகள் அமைச்சின் அனுசரனையில் இந்த கண் பரிசோதனை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது ஓட்டமாவடி பிரதேச செயலகப்பிரிவில் உள்ள வறுமைக் கோட்டில் வாழும் பார்வை குறைவடைந்தவர்களுக்கான கண் பரிசோதனையும் மூக்குக் கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டது.

மீறாவோடை கிராம சேவகர் பிரிவுக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் எஸ்.எச்.கஸ்ஸாலி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எஸ்.ஏ.றபீல் மூக்குக் கண்ணாடிகளை வழங்கினார்.

இரண்டாயிரம் பேருக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்ட இந்த நிகழ்வில் சமுக சேவைகள் அமைச்சின் அதிகாரிகள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத் தொகுதி பிரதேச அமைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .