2026 மே 09, சனிக்கிழமை

மட்டு. விபத்தில் இளைஞன் பலி; இருவர் காயம்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 30 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வ.சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவில் நேற்று திங்கட்கிழமை இரவு எட்டு மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பெரியபோரதிவு கிராமத்தினைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இஸ்த்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்  மேலும் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

பொரியபோரதீவு கிராமத்தினைச் சேர்ந்த செல்வநாயகம் அணுக்காந் வயது 22 என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்தவராவார். பெரியபோரதீவு கிராமத்திலிருந்து முனைத்தீவு கிராமத்திற்கு தமது உறவிர் ஒருவரின் வீட்டுக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் சென்றுள்ளனர் பலத்த வேகத்துடன் சென்ற மோட்டார் சைக்கிள் முனைத்தீவு – பொரியபோரதீவு பிரதான வீதியின் அருகில் நின்ற மரம் ஒன்றில் மோத்தியதாலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமத்திக்கப் பட்டுள்ளதாகவும் இடந்தவரின் உடல் களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இறந்தவர் கால்வி பொதுத்தர உயர்தரத்தில் கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தினைப் பெற்று பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இவ்விபத்து குறித்து களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .