2026 மே 09, சனிக்கிழமை

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பாக்கீர் நீதிமன்றில் சரண்

Super User   / 2013 ஏப்ரல் 30 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எச்.எம்.பாக்கீரை எதிர்வரும் மே 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவியொருவரை கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்தார் என்ற குற்றஞ்சாட்டின் பேரில் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நகர சபை உறுப்பினர் எச்.எம்.பாக்கீர் சரணடைந்தார்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ், எதிர்வரும் மே 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி காத்தான்குடி நகர சபை உறுப்பினாரில் தாக்கல் செய்யப்பட்ட முன் பிணை மனு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ்வினால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த மாணவி துஷ்பிரயோகப்படுத்தப்பட்டமைக்கான அறிகுகள் எதுவுமில்லை என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

தொடர்புடைய செய்திகள்:

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் மாணவியை வல்லுறவுக்குட்படுத்த முயற்சி

மாணவியிடம் பாலியல் சேஷ்டை: நகரசபை உறுப்பினரின் முன்பிணை மனு நிராகரிப்பு

மாணவியிடம் தவறாக நடக்கவில்லை: எச்.எம்.பாக்கீர்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .