2026 மே 07, வியாழக்கிழமை

உயிரியியல் கழிவுகளை முறையாக கழிவு முகாமைத்துவம் செய்ய நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 மே 02 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியிலுள்ள தனியார் மருந்தகங்கள் மற்றும் ஆய்வுகூடங்களிலிருந்து நாளாந்தம் வெளியாகும் உயிரியியல் கழிவுகளை முறையாக கழிவு முகாமைத்துவம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.ஆதில் அகமட், காத்தான்குடியிலுள்ள தனியார் மருந்தகங்களின் வைத்தியர்கள் மற்றும் ஆய்வுகூடங்களின் உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

காத்தான்குடியிலுள்ள தனியார் மருந்தகங்கள் மற்றும் ஆய்வுகூடங்களிலிருந்து நாளாந்தம் வெளியாகும் உயிரியியல் கழிவுகளை முறையாக கழிவு முகாமைத்துவம் செய்வது தொடர்பாக ஆராயப்பட்டன.

இந்நிலையில், இங்குள்ள தனியார் மருந்தகங்கள் மற்றும் ஆய்வுகூடங்களிலிருந்து நாளாந்தம் வெளியாகும் உயிரியியல் கழிவுகளை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலுள்ள கழிவு அகற்றும் இயந்திரத்தின் மூலம் கழிவு முகாமைத்துவம் செய்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக காத்தான்குடி நகரசபை தொழிலாளர்களை பயன்படுத்துவதெனவும் தரம் பிரித்து கழிவுகளை ஒன்றாகச் சேகரித்து கழிவு முகாமைத்துவம் மேற்கொள்வதெனவும்  முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

இம்மாதம் 11ஆம் திகதியிலிருந்து இதனை நடைமுறைப்படுத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

இதற்காக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தலைமையில்  வைத்தியர்கள் மற்றும் மருத்துவ ஆய்வுகூட உத்தியோகத்தர்கள், நகரசபை உத்தியோகத்தர்கள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .