2026 மே 06, புதன்கிழமை

சட்டவிரோத இறைச்சியை விற்பனைக்கு கொண்டு வந்தவர் கைது

Suganthini Ratnam   / 2013 மே 02 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

சட்டவிரோதமாக அறுக்கப்பட்ட மாட்டு இறைச்சியை விற்பனைக்கு வந்ததாகக் கூறப்படும் ஒருவரை பொலிஸார் இன்று வியாழக்கிழமை காலை கைதுசெய்துள்ளனர்.

அத்துடன்,  இந்தச் சந்தேக நபரிடமிருந்து 30 கிலோகிராம் மாட்டு இறைச்சியையும் இறைச்சியை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உறுகாமம் பகுதியில் சட்டவிரோதமாக அறுக்கப்பட்ட மாட்டு இறைச்சியை ஏறாவூர் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்தபோதே இந்தச் சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .